ரணிலுக்கு எதிராக ரவி..?
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை பிரதமர் ரணில் மீது திருப்பும் வகையிலான கருத்துகளை ரவி கருணாநாயக்க வெளியிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் தொடர்பில் தமக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதன் தாற்பரியம் புரியவில்லை என ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் மத்திய வங்கியோ அல்லது அரச வங்கிகளோ தமது அமைச்சின்கீழ் இயங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு எதிராக எவ்வாறு குற்றம் சுமத்தப்படுகின்றது என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் தான் 25 ஆண்டுகளாக இருப்பதாகவும், தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த பலர் முயற்சித்துவருவதாகவும், அதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் காலத்தில் மத்திய வங்கியோ, அரச வங்கிகளோ தமது அமைச்சின்கீழ் இயங்கவில்லை என்று கூறுவதன் மூலம் அவை பிரதமர் ரணிலின் கீழ் இயங்கியதாக மறைமுகமாக ரவி குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் ரவி கருணாநாயக்க, தன்மீது குற்றமில்லை என்று கூறி, பிரதமரைப் பொறியில் சிக்க வைக்க முயற்சிக்கார் என தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது.
Post a Comment