Header Ads



முஸ்லிம் தனியார் சட்டம் தயார், முக்கிய சில சிபார்சுகள் அவுட்டாகியது

-ARA.Fareel-

எட்டு வரு­ட­கா­ல­மாக மேற்­கொள்­ளப்­பட்ட தீவிர முயற்­சி­க­ளை­ய­டுத்து முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பான சிபா­ரி­சுகள் நிறை­வுக்கு வந்­துள்­ளன.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மை­யி­லான குழு தனது சிபா­ரிசு அறிக்­கை­யினைப் பூர­ணப்­ப­டுத்தி அங்­கத்­த­வர்­களின் கையொப்­பங்­களைப் பெற்றுக் கொண்­டுள்­ளது.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு தனது பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட அறிக்­கையை ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் நீதி மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளிக்­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இதற்­கென குழு அமைச்சர் தலதா அத்து கோர­ள­வுடன் சந்­திப்­பொன்­றை நடத்துவதற்கு கோரிக்கை விடுத்­துள்­ளது.

ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழு இறு­தி­யாக தனது அமர்­வினை கடந்த 20 ஆம் திகதி நீதி­ய­மைச்சின் கேட்­போர்­கூ­டத்தில் நடத்­தி­ய­போது குழுவின் அங்­கத்­த­வர்கள் பலர் சமு­க­ம­ளிக்­காதிருந்தும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யினால் திருத்­தங்கள் தொடர்பில் மாற்றுக் கருத்­துகள் சில உள்­ள­டங்­கிய அறிக்­கை­யொன்­றினை சமர்ப்­பித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

தற்­போது குழுவின் மத்­தியில் இருந்த கருத்து முரண்­பா­டுகள் தீர்க்­கப்­பட்­டு­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­துடன் அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் திருத்த சிபா­ரி­சுகள் அடங்­கிய ஒரு அறிக்­கையே சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அமைச்­ச­ரிடம் குழு தனது அறிக்­கையைச் சமர்ப்­பித்­ததும் அறிக்கை ஏற்­க­னவே திருத்­தங்­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை உப குழு­விடம்  சமர்ப்­பிக்­கப்­படும்.

முஸ்லிம் விவ­கார அஞ்சல், அஞ்சல் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்

இது தொடர்பில் அமைச்­ச­ரிடம் கருத்து வின­வி­ய­போது முஸ்லிம் தனியார் சட்­ட­தி­ருத்த சிபா­ரிசு அறிக்கை கிடைக்­கப்­பெற்­றதும் திருத்­தங்கள் தொடர்பில் ஆராய்ந்து விட்டு அறிக்கை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்டு அனு­மதி கோரப்­படும். சட்­டமா அதிபர் திணைக்­களம் அறிக்கை அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணற்­ற­வ­கையில் என்றால் அனு­ம­தி­ய­ளிக்­கப்­படும். அதன்­பின்பே சட்­ட­மூலம்  அமைச்­ச­ர­வை­யினால் அங்­கீ­கா­ரத்­துடன் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் என்றார். 

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய  திருத்­தங்­களைச் சிபார்சு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவின் பணிகள் கால­தா­ம­த­மா­வதால் அதனைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே 2016 இல் முன்னாள்  நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜாபக் ஷவினால் அமைச்­ச­ரவை உப குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டது.

இந்த அமைச்­ச­ரவை உப குழுவில் அமைச்­சர்­க­ளான  கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், பைசர் முஸ்­தபா, எம்.எச்.ஏ.ஹலீம், சந்­தி­ராணி பண்­டாரா, சுதர்­ஷனி பெர்­னாண்டோ புள்ளே ஆகியோர் அங்கம் வகிக்­கின்­றனர்.  

சிபாரிசுகள் 

தனியார் சட்­ட­தி­ருத்த சிபார்­சு­களில் பெண்­களின் திரு­மண வய­தெல்லை, பல­தார மணம், தாப­ரிப்பு பணம் செலுத்தத் தவறும் பட்­சத்தில் நீதிவான் நீதி­மன்­றங்­க­ளுக்கும் அனுப்­படும். வலி­யு­றுத்தற் கட்­ட­ளை­களில் மாற்­றங்கள், காதி­நீ­தி­மன்­றங்­களின் அதி­கா­ரங்­களை அதி­க­ரித்து அவர்­க­ளுக்கு நீதிவான் நீதி­ப­தி­க­ளுக்கு சம­மான அதி­கா­ரங்­களை வழங்கல்,  அவர்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வு­களை அதி­க­ரித்தல், உட்­பட பல சிபாரிசுகள் உள்ளடக்கப் பட்டுள்ளன என்று தெரிய வருகிறது.

சட்டதிருத்த சிபார்சு குழுவில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாசபையின் தலைவர், செயலாளர், நீதிபதிகள், சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 18 பேர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்குழுவினை 2009 ஆம் ஆண்டு அக்கால நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொரகொட நியமித்திருந்தார்.

6 comments:

  1. 1) under age marragie is a crime today: Under all laws: so, it should be banned forever in Sri Lanka among all communities: what some people did in the past is not legal precedent for us to copy: what all said and reported about Prophet marrying Aisha at 9 or more is controversial: it may have been suited for that time: so, following prophet in some his personal matter is not Sunnah: we can not marry more as prophet did: he had special permission.. Do not generalise it to all age and all times...
    2) polygamy is too a controversial one today: We do not live in a Muslim country to legalise it as we like it..
    3) maintenance is a must and all should pay: he should be punished if he does not pay it.. Take away his wealth and pay it to wife and children by law: It is a must: you can seek court order for this ,..
    4) if ladies can lead prayer as Imam Ibn Taymiah and Tabari said: why not ladies become judge on family issues. if they can work in government courts why not in this court?

    ReplyDelete
  2. ஒவ்வொரு திருத்தங்கள்பற்றியும் எமக்கு விரிவான கட்டுரை அவசியம்.

    ReplyDelete
  3. Brother Atteeq Our community seriously lack tolerance to sit and discuss these issues without starting mud sling at those who have a different view on these matters.

    ReplyDelete
  4. அல்லாஹ்வின் சட்டத்துக்கு மாற்றமாக எதாவது இருப்பின் நாளை மறுமையில் மாட்டிக்கொள்வார்கள் அது மட்டுமல்ல உலகத்திலும் அவர்களை அல்லாஹ் இழிவுபடுத்துவான் ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களை எச்சரிக்கிறேன்.

    ReplyDelete
  5. * சட்டம் இயற்றுபவர்கள் எல்லாம் மார்க்கம் தெரிந்தவர்கள் என்றும் இல்லை
    * மார்க்கம் தெரிந்தவர்கள் எல்லாம் சட்டம் தெரிந்தவர்களும் இல்லை

    * உலகத்தின் வேகத்தினை பார்த்து
    * சட்டம் மார்க்கத்தை விக்கப் பார்க்கிறது
    மார்க்கம் பயந்து தடுமாறுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது

    **மனதுக்கு பட்டதெல்லம் மார்க்கம் என நினைத்து பெருமைப்படும் சமூகத்தடையும்

    **நினைத்ததெல்லாம் மார்க்கத்தையும் சட்டதையும் நயவஞ்சகமகா பயன்படுத்தலாம் என்ற கூட்டத்தை உருவாக்காமல் மார்க்கமும் சட்டமும் இருந்தால் சரியே

    * சமூஹத்துக்காக சட்டம் இயறுப்பவர்கள் மறுமையில் பதில் கூறவெனும் என்பதை மறவாதீர்கள்
    * இருந்த மார்க்கமும் சட்டமும் salvalr போட்ட சமூகத்துக்கு abaya அணிய வைத்து ( குடும்பத்தடை பிரிய விடாமல் பார்த்தது )
    * புதுப்புது இம்மை கண்டுபிடிப்பு சட்டங்கள் எதிர்கால சந்ததியை ( abaya வை கழற்றி விட்டு jeans pant போடா வைத்து ) பாதையில் விடாமலிருக்கும் என்றால் ????????

    ReplyDelete
  6. Ateeq Abu....don't confuse yourself with your shortage knowledge..
    You should not drive the people by your fake comments as you make film as you know all about Islam....!!!
    Keep your ZIONIST CONSPIRACY with you only, don't try to spread it among the community and people...

    ReplyDelete

Powered by Blogger.