குகவரனுக்கு உதவி மேயர் பதவி வழங்கினால் மட்டுமே, இம்முறை ஜ.தே.கட்சிக்கு ஆதரவு- மனோ
(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பு மாநகர சபையிவல் கடந்த மாநகர சபைத் தோ்தலின்போது எமது கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி தனியாக போட்டியிட்டு 6 ஆசனங்களை வெற்றியீட்டியது. ஆனால் ஜ.தே.கட்சிக்கு 21 ஆசனங்களினால் ஆட்சியமைக்க முடியவில்லை. ஒரு ஒப்பந்தின் பின் முன்னாள் மேயா் முசம்மிலை மேயராக்குவதற்கு எங்களது 6 ஆசனங்கள் தேவைப்பட்டது. எங்கள் ஆதரவிலிலேயே அவா் 4 ஆண்டுகள் ஜ.தே.கட்சி கொழும்பு மாநகரத்தினை ஆண்டு வந்தனா். ஆனால் இம்முறை எமது ஒருமித்த முற்போக்கு முன்னணி முதன் மை வேட்பாளா் குகவரனுக்கு உதவி மேயா் பதவி வழங்கினால் மட்டுமே இம்முறை ஜ.தே.கட்சிக்கு ஆதரவு வழங்குவோம். என அமைச்சா் மனோ கனேசன் தெரிவித்தாா்.
இன்று(15) வெள்ளவத்தை காலி வீதியில் குகவரனின்தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அமைச்சா் மனோ கனேசன் தெரிவித்தாா்.
அங்கு அவா் தொடா்ந்து உரையாற்றுகையில ்
- வடகிழக்குக்கு வெளியே இவ் வட்டாரத் தோ்தல் முறைமையானது சிறுபாண்மை சமுகங்களினதும் பிரநிதித்துவம் இல்லாமல் போகிவிடும் பழைய விருப்பு முறையே சிறுபாண்மையினருக்கு நன்மை பயக்கும் என சிலா் கருத்துத் தெரிவிக்கின்றனா் ஆனால் அது தவறு. முன்னாள் அமைச்சா் பசில் ராஜபக்ச அவா்கள் தலைமையில் தா்ன சிறுபாண்மையினருக்கு பிரநிதித்துவம் குறையும் தோ்தல் முறையை தயாரித்திருந்தாா்கள். நானும் ஒர் அங்கத்தவராகவும் ஏனைய சிறுபாண்மைக் கட்சிகளின் தலைவா்களும் இணைந்து அதனை மாற்றியுள்ளோம். இந்த தோ்தல்முறையில் விகிதசார பட்டியல் மூலம் பிரநித்துவம் கிடைக்கும் . தோ்தல் முடிவின்போது சிறுபான்மையினருக்கு குறைவாக பிரநித்துவம் கிடைத்தால் மீண்டும் அதனை திருத்தம் கொண்டு வந்து திருத்துவோம்.. எமக்கு கொழும்பில் ஜ.தே.கட்சியில் தோ்தல் கேட்பதற்கு முன்னாள் அமைச்சா் ரவி கருநாயக்க போன்றோா் எங்களுக்கு தடை விதித்தாா். . அதனால் தான் தனியாக கொழும்பில் தோ்தல் கேட்கின்றோம். கொலனாநாவை, தெஹிவளை-கல்கிசை , வத்தளை போன்ற பிரதேசங்களில் ஜ.தே.கட்சியுடன் இனைந்து தேர்தல் கேட்கின்றோம். இதே போன்று தான் ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்வாறு தணித்தும் இணைந்தும் தேர்தல் கேட்கின்றனா். அது அந்தக் கட்சிக்கு உள்ள ஜனநாயக உரிமை. அதனை யாறும் உதாசீனம் செய்ய முடியாது. இந்த நல்ஆட்சியினை அமைப்பதற்கு பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவுடன் சோ்ந்து தொடா்ந்தும் 2020லும் நாம் கைகோா்த்து செயல்படுவோம். அவர் மூலம் எமது சமுகம் சாா்ந்த பிரச்சினைகளை அபிவிருத்திகளை முன் வைத்து வென்றெடுப்போம். என அமைச்சா் மனோ கனேசன் உரையாற்றினாா்.
Post a Comment