Header Ads



தேர்தலில் போட்டியிடும், பெண்கள் மீது பாதிப்புக்கள்..!

திறமையான பெண்களுக்கு தேர்தலில் களமிறங்க வாய்ப்புக் கிடைக்கவில்லை எனவும், பலர் விகிதாசாரப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது என, பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதுவரை வேட்பாளர்களான பெண்களுக்கு எதிராக 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், வேட்பாளர்களான பெண்கள் பாதிப்புக்குள்ளான 06 சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

இதில் அனுராதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெண் வேட்பாளர் ஒருவரைத் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளதாக, பஃவ்ரல் அமைப்பினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.