என்னை பிச்சைக்காரனாக, நோக்க வேண்டாம் - ரவி
அரசியல் யாசகராக தன்னை நோக்க வேண்டாம் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிணை முறி விவகாரம் தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.
தாம் அரசியல் யாசகம் (பிச்சை) பெறும் ஒருவன் என நினைக்கின்றீர்களா?.. 8 மில்லியன் தொடர்பிலேயே கதைக்கின்றார்கள்.
8 மில்லியன் ரூபா மோசடி செய்வதற்குரிய நிதியா? 30 – 40 – 50 கோடி ரூபாய்
மூலதனமுள்ள நிறுவனத்திற்கு குறித்த தொகை எதற்காக?
குறித்த அளவில் மூலதனம் கொண்டுள்ள நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு 8 மில்லியன் ரூபாயில் வாடகை வீடு பெறமுடியாதா?
அர்ஜுன் அலோசியசினால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் வீடு, தனது மகளால் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டது.
அதனை தவறு என்று யாராலும் கூற முடியாது. மத்திய வங்கி தன்னுடைய கட்டுபாட்டிற்குள் காணப்படவில்லை.
ஆனால் அனைவருக்கும் தெரியும் மத்திய வங்கி யாருடைய கட்டுப்பாட்டிற்குள் காணப்பட்டது என்று என அவர் கூறினார்.
Post a Comment