Header Ads



ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உயரப் பறக்கும், சீன தேசியக்கொடி

ஹம்பாந்​தோட்டை மாகம்புற துறைமுகத்தில் இன்று (1) காலை சீனா நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

குறித்த துறைமுகமானது டிசம்பர் மாதம் 9ஆம் திகதி சைனா மார்சன்ட் போட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக இன்று சீனாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அங்கு எமது நாட்டின் தேசியக்கொடி மற்றும் துறைமுக அதிகாரசபையின் கொடி என்பன ஏற்றப்பட்டிருந்ததுடன்,இலங்கையின் தேசியக்கொடி ஏனைய கொடிகளை விட ஒன்றரை அடி உயரத்தில் ஏற்றப்பட்டிருந்தது.

எனினும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  இலங்கையின் கொடியின் உயரம் குறைக்கப்பட்டு ஏனைய கொடிகளின் உயரத்துக்கு சமனாக கொண்டு வரப்பட்டுள்ளது.

4 comments:

  1. மாநிலக் கொடி பறக்க விடா நாட்டில்
    வல்லரசுக் கொடிதான் பறக்கும் என
    செஞ்சீனாவின் சிவப்பு எச்சரிக்கை!

    ReplyDelete
  2. ஒரு இடம் குத்தகைக்கு அளிக்கப்பட்டால் அவ்விடம் அவர்களின் உரிமையாகிரது, அங்கு சீனக்கொடி உயர பறப்பதில் புதிதாக எதுவுமில்லை. இங்கு எளுத்தை பார்த்தால் சீனா அதி நவீன ஏவுகணையை நிறுத்தியதைபோல் எளுதப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. #Jiffry Abdulcareem
    ...مرحبا بك

    ReplyDelete

Powered by Blogger.