Header Ads



ரணில் சொல்வதைப் போன்று, விசாரணை நடத்தட்டும் - எதிர்கொள்ள நாங்கள் தயாராகத்தான் இருக்கின்றோம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள சவாலை ஏற்கத் தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர் சவால் விடுத்துள்ளார்.

2008ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 10 ஆயிரம் பில்லியன் ரூபா மோசடி நடந்துள்ளது என்றும், இந்த மோசடி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நேற்றைய தினம் பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமரின் இந்தக் கருத்துக்கு பதில் வழங்கியுள்ள மகிந்த ராஜபக்ச,

எது நடந்தாலும் மகிந்த மீதும், மகிந்தவின் குடும்பம் மீதுமே இவர்கள் பழி போடுவார்கள். இன்று இவர்கள் கோடிக் கணக்கில் சுருட்டிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இதனை மறைப்பதற்கு மறுபடியும் எனது பெயரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் ரணில் சொல்வதைப் போன்று, விசாரணை நடத்தட்டும். அதனை எதிர் கொள்வதற்கு நாங்கள் தயாராகத் தான் இருக்கின்றோம் என்றார்.

பிணை முறி விவகாரத்தில் ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் பலர் இனம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர் கட்சியினர் விமர்சித்துவருகின்றனர்.

இதுவொரு புறமிருக்க, பிரதமர் நியமித்த ஒருவர் குற்றம் செய்தார் என்பதற்காக பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற அவசியம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.