Header Ads



பிரதமரை சந்திக்கிறது, தவ்ஹீத் ஜமாஅத்


வாழ்வுரிமை மாநாட்டின் பிரகடனங்கள் தொடர்பில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் பிரதரமரின் விசேட ஆலோசகர் சந்திப்பு.


தேர்தல் முறை மாற்றத்திற்கு எதிராக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த 26.11.2017 அன்று கொழும்பில் ஆயிரக் கணக்கான பொது மக்கள் ஒன்று திரட்டப்பட்டு முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது.


குறித்த மாநாட்டில் இலங்கை ஆளும் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட புதிய (கலப்பு) தேர்தல் முறையினால் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறையும் ஆபத்து இருக்கிற காரணத்தினால் அதனை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த விகிதாசார தேர்தல் முறைமையே மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன், வட கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்து ஒரே மாகாணமாக மாற்றும் அரசாங்கத்தின் முயற்சி கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.



தேர்தல் முறை மாற்றத்தினால் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயம் தொடர்பில் விளக்கமளிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமரை நேரில் சந்திக்க ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வாழ்வுரிமை மாநாட்டில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநாட்டு கோரிக்கை தொடர்பில் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் விசேட ஆலோகர் தடல்லகே உடனான சந்திப்பு கடந்த 11.01.2018 அன்று கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.


தேர்தல் முறை மாற்றம் தொடர்பான முஸ்லிம்களின் நிலைபாடுகள் மற்றும் வடகிழக்கு இணைப்பு தொடர்பான முஸ்லிம்கள் தரப்பு நியாயங்களை கேட்டறிந்து கொண்ட பிரதமரின் ஆலேசகர் விரைவில் பிரதமருடன் நேரடியாக தவ்ஹீத் ஜமாஅத் இது தொடர்பில் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக தெரிவித்தார்.


பிரதமரின் ஆலோகருக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருக்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பொன்றும் வழங்கப்பட்டு இஸ்லாம் தொடர்பாக குறிப்பாக அவருக்கிருந்த சில முக்கிய சந்தேகங்களுக்கு ஆதாரபூர்வமான பதில்களும் மிகத் தெளிவாக வழங்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.


-ஊடகப் பிரிவு,
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ


1 comment:

  1. He is not a special advisor for Prime Minister. Before publish find the teue designation jaffna Muslim

    ReplyDelete

Powered by Blogger.