Header Ads



பிரதமர் தப்பிக்க, நினைக்கக் கூடாது

மத்திய வங்கியின் பிணைமுறிக் குற்றச்சாட்டுக்களை அர்ஜுன மகேந்திரன் மற்றும் அர்ஜுன் அலோஷியஸ் ஆகியோர் மீது போட்டுவிட்டு தான் தப்பிக்க பிரதமர் நினைக்கக் கூடாது என்று ஊழல்களுக்கு எதிரான முன்னணி தெரிவித்துள்ளது.

மேற்படி அமைப்பின் தலைவர் வலப்பனை சுமங்கல தேரோ விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிணைமுறி குற்றச்சாட்டுக்களுக்கான முழுப் பொறுப்பையும் தார்மீக ரீதியாக ஏற்று அதற்கு முகங்கொடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வரவேண்டும். மேலும், ஐந்தே மாதங்களில் சுமார் 11 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தை மோசடியாகப் பெற்றுக்கொண்ட குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

“மேலும், அரசுக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்பை உடனடியாகச் சரிசெய்யும் வகையில், மோசடியாகப் பெறப்பட்ட பணத்தை அவர்களிடம் இருந்து அரசு கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.