முதுகில் குத்த, ஜனாதிபதி முயற்சி - மரிக்கார் குற்றச்சாட்டு
பிக் பொக்கட் அதிபர் என்று மைத்திரிபால சிறிசேனவை, விமர்சித்துள்ள ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.மரிக்கார், மகிந்த ராஜபக்சவின் முதுகில் குத்தியது போன்று அவர் ஐதேகவின் முதுகிலும் குத்த முனைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த 10ஆம் நாள் நடந்த மோதல்கள் தொடர்பாக, கருத்து வெளியிட்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐதேகவினரும், கூட்டு எதிரணியினரும் மாறி மாறி திருடர்கள் என்று குரல் எழுப்பினர். மக்களுக்கு திருடர்கள் யார் என்று தெரியும் என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக கொழும்பில் நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார்,
“சிறிலங்கா அதிபர் எம்மை பிக்பொக்கட் காரர்கள் என்று அழைத்துள்ளார். ஆம், நாங்கள் பிக்பொக்கட் காரர்கள் தான்.
மகிந்த ராஜபக்சவின் சட்டைப் பையில் இருந்த அவரை, நாங்கள் தான் பிக்பொக்கட் அடித்து வெளியே கொண்டு வந்தோம் என்பதை, சிறிலங்கா அதிபர் மறந்து விடக் கூடாது. அவரும் ஒரு பிக்பொக்கட் அதிபர் தான்.
எமது ஆதரவுடன் அதிபரான பின்னர், அடுத்த தேசிய தேர்தல்களில் எம்முடன் இணைந்து செயற்படாமல் இருப்பதற்கு அவர் திட்டமிட்டார்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆசாமி பேச்சில் மட்டும்தான் வில்லன். நாட்டில் மிகப் பெரிய சட்டவாக்கம் செய்யும் நிறுவனத்தில் மக்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த தகுதியும் இவருக்கு இல்லை. இவரை அங்கு அனுப்பியவரும் இவரும் ஒரே அந்தஸ்த்துதான். நாட்டின் ஜனாதிபதிக்கு எப்படி மரியாதையாக பேச வேண்டும் என்ற அடிப்படைஅறிவு இல்லாத ஒருவன். அதுவேறு முஸ்லிம் என தன்னை மாறு தட்டிக் கொண்டு எந்த வகையிலும் இஸ்லாத்துக்குத் தொடர்பில்லாத வகையில் நடந்து கொண்டு இந்த நாட்டில் வாழும் 8வீத முஸ்லிம்களையும் அவமானப்படுத்துகிறான்.
ReplyDeleteLate Jhanam..but its good that you people understood about him at least now
ReplyDeleteNow I undestand what is meant by "YAHAPALANAYA". This type of critism was impossible during Mahinda period.
ReplyDelete