Header Ads



முன்­னைய ஊழல் மோச­டிகள் குறித்து எவரும் பேசு­வ­தில்லை

மத்­திய வங்கி  பிணைமுறி  விவ­காரம் குறித்து  தற்­போது அனை­வரும் பேசு­கின்­றனர். ஆனால்,  அதற்கு முன்னர் நடை­பெற்ற  ஊழல் மோச­டிகள்  குறித்து  எவரும் பேசு­வ­தில்லை.  அந்த விட­யங்கள் குறித் தும்  உரிய விசா­ரணை  நடத்­தப்­படும்  என்று  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  தெரி­வித்­துள்ளார். 

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும்  கட்சி   தலை­வர்­களை  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து  கலந்­து­ரை­யா­டினார்.  

இந்த சந்­திப்­பின்­போது  கருத்து தெரி­விக்­கை­யி­லேயே  அவர்  இவ்­வாறு கூறி­யுள்ளார். 

 இங்கு மேலும் கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி  உள்­ளூ­ராட்சி தேர்­தலில்  தாம் ஒன்­றி­ணைந்து  வெற்­றியை பெற­வேண்டும்.  அதற்­கான செயற்­பா­டு­களில்  அனை­வரும் ஈடு­ப­ட­வேண்டும். தற்­போது  மத்­திய வங்கி  பிண­முறி விவ­காரம் தொடர்­பி­லேயே   பொது எதி­ர­ணி­யினர் உட்­பட அனை­வரும் பேசு­கின்­றனர்.  கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் பல்­வேறு ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. அவை தொடர்­பான  அறிக்­கையும் என்­னிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த விடயம் குறித்தும் உரிய விசா­ரணை இடம்­பெறும் என்று கூறி­யுள்ளார். 

இந்த சந்­திப்பில்  இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் சார்பில்  தலைவர்  முத்து சிவ­லிங்கம், ஜன­நா­யக தொழி­லாளர் சார்பில்  அதன் தலைவர்  பிரபா கணேசன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா,  மற்றும் ஈ.பி.டி.பி.  கட்சி பிரதிநிதிகள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.