சாய்ந்தமருது மு.கா. பிரசாரக் கூட்டத்தில் குழப்பம் - ஹக்கீமும், ஹரீஸும் அப்சன்ட்
(சாய்ந்தமருது, நியாஸ்)
நேற்றிரவு சாய்ந்தமருதில் மு.கா.சார்பில் ஐக்கியதேசியக் கட்சியில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் காரியாலயத்திறப்பு விழாவும் தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் வைத்தியசாலை வீதியில் ஏற்பாடாகி இருந்தது.
தற்போது சாய்ந்தமருதில் மு.கா.கட்சிக்கு கடும் எதிர்ப்பு நிலவிவரும் நிலையில் இக்கூட்டம் மாலை 6.00மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அங்கு நிலவிய சில சலசலப்புகள் காரணமாக இரவு 8.00 மணிக்கு கூட்டம் ஆரம்பமானது.
கூட்டம் ஆரம்பமாகி சில நேரங்களில் அங்கு திரண்ட பொதுமக்களும் இளைஞர்களும் கூட்டம் நடாத்துபவர்களுக்கு கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டனர் அத்தோடு அவ்வீதியில் உள்ள வீடுகளின் வெளிச்சங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு மேலும் எதிர்ப்புகள் காட்டப்பட்டன அதனையும் பொறுட்படுத்தாது கூட்டம் இரண்டு மணி நேரங்கள் நடந்தது.
குறித்த கூட்டத்திற்கு அதிதிகளாக மு.கா.தலைவர் மற்றும் பி.அமைச்சர் ஹரீஸ் ஆகியோர் வரவுள்ளதாக ஊரில் பரவலாகப்பேசப்பட்டது.
சாயந்தமருது பிரதான வீதியில் சென்ற அனைத்து வாகனங்களும் இளைஞர்களால் சோதனை செய்யப்பட்டதுடன் பிரதான வீதியில் ஒரு பதட்டமான சூழல் உருவாகியிருந்தது.
இறுதியில் சாய்ந்தமருதில் இடம் பெற்ற கூட்டத்தில் பி.அமைச்சர் ஹரீஸ் மற்றும் மு.கா.தலைவர் றவுப்ஹகீம் ஆகியோர் வருகை தராமலே கூட்டம் நிறைவடைந்தது.
அவமானம்... அவமானம்... இது ஒரு ஜனநாயக விரோத செயல்... இஸ்லாமிய விரோத செயல்... காட்டு தர்பாரு நடத்தும் காடையர்களின், பொறுக்கிகளின், காவாளிகளின் கூடமாக சாய்ந்தமருது மாறிவிட்டது. இந்த அடாவடி தனத்தை நிறுத்துவதட்கு சாய்ந்தமருதுவின் உலமாக்களும், புத்திஜீவிகளும், பண்பாளர்களும், நீதியாளர்களும் முன்வந்து நடவடிக்கை எடுக்காது விட்டால்... நிட்சயம் சாய்ந்தமருது காடையர்களினதும், காவாளிகளினதும், பொறுக்கிகளினதும் அராஜகத்துக்கு ஆளாக வேண்டி ஏட்படும். தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரனாக மாறிவிடுவான் என்பதை சுட்டிக் காட்ட
ReplyDeleteவிரும்புகிறோம்.