Header Ads



சவுதியில் இப்படியும் ஒரு விவாகரத்து

சவுதியில் தாய் மற்றும் சொந்த குடும்பத்தினரை விட தன்னை கணவர் அதிகம் நேசித்ததால் கணவரிடமிருந்து மனைவி விவாகரத்து வாங்கியுள்ளார்.

29 வயதான கணவரும் மனைவியும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் மனைவியுடன் தனியாக வாழ தாய் மற்றும் குடும்பத்தினரை கணவன் பிரிந்துள்ளார்.

மனைவியை அன்பாக பார்த்து கொள்வது, விலை உயர்ந்த பரிசுகள் வாங்கி தருவது என கணவர் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில் கணவரிடமிருந்து தனக்கு விவாகரத்து கோரி மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்றத்தில் மனைவி பேசுகையில், எனக்காக சொந்த குடும்பத்தை கணவர் துரத்திவிட்டுள்ளார், என்னை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள எல்லா விடயத்தையும் செய்த கணவர் அவர் தாய்க்கு சின்ன உதவி கூட செய்யவில்லை.

இப்படிபட்டவரோடு நான் எப்படி வாழ்வது? என்னையும் ஒருநாள் கணவர் விரட்டி விடுவார் என பயமாக உள்ளது.

அதனால் எனக்கு விவாகரத்து வேண்டும் என கூறினார், ஆனால் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கூறிய கணவர் உனக்காக தானே எல்லோரையும் புறக்கணித்தேன் என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கணவன், மனைவி இடையே விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

1 comment:

  1. We looking sisters/brothers like you....great work.....some idiots forget about how much his mother suffered during his/her birth.

    ReplyDelete

Powered by Blogger.