பள்ளிவாசல் சி.சி.ரி.வி. கெமராக்கள் திருட்டு - ஏறாவூரில் சம்பவம்
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஏறாவூர் காட்டுப்பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த 3 சி.சி.ரி.வி. கெமராக்கள் சனிக்கிழமை அதிகாலை திருடப்பட்டுள்ளதாக மேற்படி பள்ளிவாசல் நிருவாகம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
இச்சம்பவம் பற்றிச் சமூக சேவையாளரும் ஏறாவூர் காட்டுப்பள்ளிவாசல் தலைவருமான எம்.எல். அப்துல் லத்தீப் மேலும் தெரிவிக்கையில்,
இந்தக் காட்டுப் பள்ளிவாசலில் முன்னும் பின்னுமாக 3 பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த காணொளிக் கமெராக்கள் திருடப்பட்டுள்ளன.
ஊர் மத்தியில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடமென்பதால் இங்கு காணொளிக் கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால், இவ்வாறு காணொளிக் கமெரா பொருத்தப்பட்டிருந்தமை சமூக விரோத சக்திகளுக்கு இடைஞ்சலாக அமைந்துள்ளதன் காரணமாகவே இதனை இவர்கள் திருடிச் சென்றிருக்கலாமென தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
இதேவேளை காட்டுப்பள்ளிவாசல் நாற்சந்தியில் வெவ்வேறு இடங்களில் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கெமராக்கள் இதற்கு முன்னரும் 3 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கன.
Post a Comment