நுவரெலியாவில் கடும் குளிர், பனித்துளியும் விழுகிறது
இலங்கையில் பல பகுதிகளில் மாறுபட்ட காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குளிரான காலநிலை நிலவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த நாட்களில் வறட்சியாக காலநிலையை எதிர்பார்க்க முடியும். ஆனாலும் காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிரான காலநிலையும் மதிய வேளையில் வெப்பமான காலநிலையும் நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான மாறுபட்ட காலநிலை அடுத்து வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நுவரெலியாவில் பனித்துளிகள் விழுவதனால் அதிக குளிருடனான காலநிலை நிலவுவதாக திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் என்றுமில்லாதவாறு கடும் குளிரான காலநிலை நிலவுதாக பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இதுவொரு புது அனுபவம் என குறிப்பிட்டுள்ளனர்.
2
நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக வளிமண்டவியல் திணைக்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும் எனவும் கூறப்படுகிறது.
நாட்டைச் சூழவுள்ள கடற் பகுதிகளில் காற்று மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடக்கு முதல் வடகிழக்கு வரையிலான திசைகளில் இருந்து வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகமான மாகாணங்களில் பிற்பகல் 2.௦௦ மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment