தேசிய அரசுக்குள், பெரும் குழப்பம் - மைத்திரியுடன் மோதும் குட்டி யானைகள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனால், தேசிய அரசுக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னர் விசேட உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.தே.க. பக்கம் வாளை வீசியிருந்தார். அதன்பின்னர் தேர்தல் பரப்புரை மேடைகளில் பேசிய அவர் ஐ.தே.க. மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இதையடுத்தே ஐ.தே.கவின் இளம் எம்.பிக்கள் கொதித்தெழுந்து மைத்திரி மீது விமர்சனக்கணைகளைத் தொடுத்துவருகின்றனர்.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மரிக்கார், சமிந்த ஆகியோரே ஜனாதிபதியைப் பகிரங்கமாகவே விமர்சித்து உரையாற்றிவருகின்றனர்.
எனவே, அடுத்துவரும் நாட்களில் இந்த விவகாரம் தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பையும், அதிரடி மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment