ஜனாதிபதியால் அரசாங்கத்தை மாற்றமுடியும் - டிலான்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலின் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.
எனினும், காய்நகர்த்தல் மூலம் ஆட்சியை மாற்ற முடியும்.
அதனையும் ஜனாதிபதியே மேற்கொள்ள வேண்டும்.
நாட்டின் பிரதமரையோ அமைச்சர்களையோ மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறுவதை போன்று எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்ள முடியாதென, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.
Post a Comment