Header Ads



பைத்தியக்கார ஆஸ்பத்திரியா? ஜனாதிபதி செயலகம்..? அநுரகுமார


ஜனாதிபதி செயலாளர் தனது கடிதத்தில் 34 நிறுவனங்கள் தொடர்பான அறிக்கைகள் தங்களிடம் இல்லை என்று கூறியுள்ளார். அறிக்கை வழங்கி 10 நாட்களுக்குள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அவை காணாமல் போயுள்ளன. இது ஜனாதிபதி செயலகமா அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரியா என எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஜே.வி.பி.யின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.  

பிணைமுறி விவகாரம் தொடர்பிலான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் அறிக்கையை, தேர்தல் முடியும் வரை பின்போடவே அரசாங்கம் முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.சபையை முறையாக வழிநடத்துவதில் சபாநாயகர் தவறியதாலே சபையில் எம்.பிகளிடையே மோதல் ஏற்பட்டு இரத்தம் சிந்தும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (10) அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“நாமும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரியிருந்தோம். பிணை முறி அறிக்கை மற்றும் ஏனைய விசாரணை அறிக்கை என்பவற்றை சபையில் சமர்ப்பித்து விவாதம் நடத்துமாறு கோரியிருந்தோம்.  

“ஆனால் பிணைமுறி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை அதனை ஒருவாரத்தில் தருவதாக ஜனாதிபதி செயலாளர் கூறுவதை ஏற்க முடியாது” என்றார். 

5 comments:

  1. So you have to demand My3 who delivered the report...Where is he now...?
    He is polishing his party only with News First Team...????

    ReplyDelete
  2. So you have to demand My3 who delivered the report...Where is he now...?
    He is polishing his party only with News First Team...????

    ReplyDelete
  3. உங்கள் ஆட்சி வரும்வரைக்கும் இவர்களை திருத்தமுடியாது தலைவர் அவர்களே!

    ReplyDelete
  4. நல்லாட்சி நாளுக்கு நாள் என்னமோ ஆட்சியாக மாறிவருகின்றது. அதன் ஆட்சிகாலம் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றதா? பாராளுமன்றத்துக்கு கட்டுப்படாத போக்கா?

    ReplyDelete
  5. Such problems will come to an end only when JVP rules the country.

    ReplyDelete

Powered by Blogger.