பாராளுமன்றில் அமளி, ரணில் உரையாற்றியபோது நடுவே வந்து குழப்பம்
பிரதமர் உரையின் போது, ஏற்பட்ட அமிளி துமிளியை அடுத்து, பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதங்களுக்காக விஷேட பாராளுமன்ற அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, பிரதமர் உரையாற்றிய வேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பாராளுமன்றத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment