Header Ads



பிரபாகரனின் படத்தை பேஸ்புக்கில், பதிவிட்டவர்களுக்கு விளக்கமறியல்

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் மற்றும் புலிகளின் சின்னத்துடன் உருவாக்கப்பட்ட புத்தாண்டு வாழ்த்து மடலை முகநூலில் பதிவேற்றிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க உத்தரவிட்டுள்ளார்.

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் மற்றும் அந்த அமைப்பின் சின்னம் என்பன முகநூலில் ஊடாக பிரச்சாரப்படுத்தப்படுவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களான இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி - மில்லப்பிட்டிய தோட்டத்தை சேர்ந்த விஜயகுமார் விதுஷன் மற்றும் இரத்தினபுரி சமகிபுர பகுதியை சேர்ந்த செவனு தினேஷ் குமார் ஆகிய இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. இப்படியெல்லாம் தீவிரவாதத்தை பரவச்செய்யவே பயங்கரவாத தடை சட்டத்தை அகற்றக்கோரி அலைகிறார்கள் இந்த தமிழ் அடிப்படைவாதிகள்

    ReplyDelete

Powered by Blogger.