பங்காளிகளை சந்திக்கிறார் ஜனாதிபதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரி அழைத்திருப்பதானது கொழும்பு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் 9 கூட்டணி கட்சிகளின் தலைவர்களை கொழும்பில் வைத்து சந்திக்க ஜனாதிபதி முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இதில் கலந்துரையாடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வருடத்தில் ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் முதல் கூட்டமாக இது அமையவுள்ளது.
கூட்டு அரசு 2020 ஆம் ஆண்டுவரையில் தொடரும் எனப் பல்வேறு தரப்பினரும் அறிவித்துவந்தாலும், கூட்டு அரசுக்குள் பிணைமுறி மோசடி விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment