மேக்கப் பொருட்களுக்கு கட்டுப்பாடு
ஒப்பனை பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை உரிய சட்ட திட்டங்களுக்கு அமைய நடைமுறைப்படுத்துவதாக தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகாரசபையின் தலைவர் மருத்துவர் கமல் ஜெயசிங்ஹ இதனை தெரிவித்தார்.
சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற சட்டவிரோதமான ஒப்பனை உற்பத்திகளை கண்டறிவதற்கு விசேட சுற்றிவலைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் ஒப்பனை பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதனால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத ஒப்பனை பொருட்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் விஷத் தன்மை கொண்ட ஒப்பனை பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவற்றிற்கு தடைவிதிக்கப்படுதாக ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் கமல் ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனுமதியளிக்கப்படுகின்ற ஒப்பனை பொருட்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment