அதிகரிக்கும் நெருக்கடி
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் நெருக்கடிகள் அதிகரித்து செல்வதாகவே தெரியவருகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதில் வெற்றி பெறும் நோக்கில் இரண்டு கட்சிகளும் பாரிய அளவில் பிரசார வியூகங்களை அமைத்து செயற்பட்டு வருகின்ற நிலையில் இரண்டு கட்சிகளுக்குமிடையில் கடும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக தேர்தல் பிரசார மேடைகளில் இரண்டு கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கடுமையான விமர்சிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இரண்டு கட்சிகளினதும் பின்வரிசை உறுப்பினர்கள் கட்சிகள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அதுமட்டுமன்றி தற்போது பிணைமுறி அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் அதுதொடர்பிலும் பரஸ்பரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரமும் ஐக்கியதேசியக்கட்சிக்கும் சுதந்திரக்கட்சிக்கும் இடையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
அந்தவகையில்தேர்தல் காலத்தில் இரண்டு தரப்புக்குமிடையிலான நெருக்கடிகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறெனினும் ஜனாதிபதியும் பிரதமரும் தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்லவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
Post a Comment