ரவியை மேடையேற்றுவதா? இல்லையா?? இறுதிமுடிவு ரணிலின் கையில்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் முன்னாள் நிதி அமைச்சரான ரவி கருணாநாயக்க எம்.பியை மேடையேற்ற வேண்டாம் என்று அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.
பிணைமுறி மோசடி விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சி மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ள நிலையில், ரவி கருணாநாயக்கவை பிரசாரத்துக்குப் பயன்படுத்தினால் எதிர்க்கட்சிகளுக்கு ஐ.தே.க. மீது விமர்சனம் தொடுப்பதற்குரிய வழியை அது திறந்துவிடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், கட்சியின் உப தலைவரான ரவி கருணாநாயக்கவை புறந்தள்ளிவிட்டுச் செயற்பட்டால், அவரை குற்றவாளியாக நாமே அடையாப்படுத்திவிட்டதாக அமைந்துவிடும் என்று ரவிக்குச் சார்பான சில உறுப்பினர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர். அத்துடன், வடகொழும்பை மட்டும் மையப்படுத்தி ரவியின் பிரசாரம் அமையட்டும் என மேலும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இந்த விடயம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னும் இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை எனத் தெரியவருகின்றது.
Post a Comment