கொலைக்காரர்களை கைதுசெய்ய, ரணிலினால் முடியாமல் போயுள்ளது - அசாத் சாலி
கடந்த காலத்தில் நடந்த கொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய எவரையும் கைது செய்ய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முடியாமல் போயுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாநகர சபை முதல்வர் வேட்பாளர் அசாத் சாலி குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் கொலைகளை பயன்படுத்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போதிலும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான உடனடியாக செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு, நினைவு தின நிகழ்வில் கலந்துக்கொண்ட ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார். எனினும் தற்போது அவரது செயற்பாடுகள் கேள்விகளை எழுப்பியுள்ளது.
லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பந்தமான சாட்சியாளர் வெலிகடை சிறையில் கொலை செய்யப்பட்டார். எனினும் எந்த சம்பவங்களுக்கும் பிரதமர் நியாயமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment