புர்கா அணிந்துகொண்டு, வோட்டு போட முடியாது - மஹிந்த
முகத்தினை மூடும் வகையில் புர்கா அணிந்து கொண்டு வருகின்றவர்கள், உள்ளுராட்சி தேர்தல் வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதேபோன்று கறுப்புக் கண்ணாடிகள், தலைக்கவசம், தொப்பி அல்லது முகத்தை மூடும் வையில் துணிகளை அணிந்து கொண்டு வருகின்வர்களும், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
தங்கள் அடையாளத்தினை நிரூபிப்பதில் யாராவது, தேர்தல் வாக்குச் சாவடியிலுள்ள உத்தியோகத்தர்களுக்கு தொந்தரவினை ஏற்படுத்துவாராயின், அவர்கள் திருப்பியனுப்பப்படுவார் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது சட்டத்ததுடன் தொடர்புடைய ஏற்பாடு. அதற்கும் மார்க்கத்தில் பெண்கள் அணியும் புர்காவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் மாத்திரம் இதனைப் பார்ப்பது அனைவருக்கும் பயன்படும்.
ReplyDeleteமுகம் மூடுவது மார்கமில்லையே
DeleteMahindra Dehapriya enru potta Nalla irikkum
ReplyDeleteஉரியவாறு அடையாளப்படுத்த என்ன தடை இதுதான்தேர்தல் ஜனநாயகமா?இதற்கு எதிராக என்ன செல்வது?
ReplyDeleteWithout proving the identity, no one can vote. the low is common for helmats,burka and any other veils. So there is nothing to blame.
ReplyDeleteCool down.not a big issue
ReplyDeleteShe can open the face cover can show the officer.