Header Ads



உள்ளூராட்சி தேர்தலின் பின், ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிக்க போகிறோம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வாக்கெடுப்பு முடிந்த பின்னர், ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான பிரச்சாரங்களை ஆரம்பிக்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி ஒருவரை ஆட்சிக்கு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பத்தில் கட்சிக்குள் ஊதாசீனமான சுபாவம் இந்த போதிலும் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, முன்னணியில் இருந்து வருகிறது.

கிராமங்களில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர் வெறுப்படைந்துள்ளனர். இதனால், அவர்கள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு செல்ல மாட்டார்கள்.

இந்த நிலைமையில் பொதுஜன முன்னணியின் வெற்றி நிச்சயம் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Neengellam oru MP former ministeru....
    Naanum Sri Lankan enru solvathil vetkamadaihiren...unnai pola kaadayagalai paarthu....!!

    ReplyDelete

Powered by Blogger.