"சமையலறைக்குள் சென்று, விலைகளை விமர்சித்த ரணில் விக்ரமசிங்க"
நாடு தற்போது நரகத்தை விட மோசமான நிலைமைக்கு சென்றுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்னர் ஒரு கிலோ கிராம் அரிசியை 55 ரூபாவுக்கு வழங்கிய போது, ரணில் விக்ரமசிங்க சமையலறைக்குள் சென்று விலைகளை விமர்சித்தார். தற்போது அரிசியின் விலை 110 ரூபாவாக அதிகரித்துள்ளது.
பொருளாதாரம் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில் இலங்கையில் மதுபான கடைகளை திறக்கும் நேரத்தில் திருத்தம் செய்வதே பெரிய பிரச்சினையாக கருதுகின்றனர்.
மக்கள் அதிகளவில் மதுபானத்தை அருந்துவதால், நாட்டின் பல பிரச்சினைகள் குறித்து அக்கறை செலுத்துவதில்லை என்பதால், அரசாங்கம் வேலைகளை செய்வது இலகுவாக இருக்கும்.
இவ்வாறான நிலைமைகளால் இலங்கை தற்போது நரகத்தை விட மோசமான நிலைமைக்குள் சென்றுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment