லு அல்சின்டர், கரீம் அப்துல் ஜப்பாராகியது ஏன்..?
கரீம் அப்துல் ஜப்பார் - உலகின் மாபெரும் கூடைப்பந்து சாம்பியன். பொதுவாக இவரைப்போன்றவர்கள் புத்தகம் எழுதினால் அது இவர்கள் சார்ந்த துறை குறித்தே அதிகமாக இருக்கும்.
ஆனால், தன்னுடைய சமீபத்திய நூலில், கூடைப்பந்து குறித்து பேசுவதை அறவே தவிர்த்திருக்கிறார் கரீம்.
மாறாக, லு அல்சின்டர் என பெயரிடப்பட்டு வளர்ந்த தான் கரீம் அப்துல் ஜப்பாராக மாறியது வரை மட்டுமே தன் நூலில் பேசுகிறார். மிகச்சரியாக இந்த நூலுக்கு "நான் கரீமாகியது எப்படி?" என்று தலைப்பிட்டிருக்கிறார்.
1971-ஆம் ஆண்டு Milwaukee Bucks அணி அதனுடைய முதல் கூடைப்பந்து சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியது. இதற்கு முழுமுதற்காரணம் லு அல்சின்டர்.
இது நடந்த அடுத்த நாள், இஸ்லாமை தான் தழுவுவதாக அறிவித்தார். விளையாட்டு உலகம் அதிசயத்தது.
ஆனால், இஸ்லாம் நோக்கிய தன்னுடைய பயணம் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கியதாகவும், இனி தான் கரீம் அப்துல் ஜப்பார் என அழைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இனவெறியின் கொடூரம், இஸ்லாமின் அருமையை தனக்கு உணர்த்தியதாகவும், இஸ்லாமை இயற்கையான ஒரு மார்க்கமாக தான் உணர்ந்ததாகவும் தன் நூலில் எழுதுகிறார் கரீம். குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி மற்றும் மால்கம் எக்ஸ் போன்றவர்கள் இஸ்லாம் நோக்கிய தன்னுடைய பயணத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் மறக்காமல் குறிப்பிடுகிறார்.
முஹம்மது அலி மற்றும் மால்கம் எக்ஸ் எப்படி தொடர்ந்து பலருக்கு ரோல் மாடலாக இருக்கிறார்களோ அது போலவே கரீம்மும் அவருடைய இந்த நூலும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆக்கம்
சகோ ஆஷிக் அஹமத்
Post a Comment