ஜனாதிபதி செயலகத்திற்கு, ரவி விஜயம்
பிணை முறி அறிக்கை மூலம் தமது கட்சியின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை இலக்கு வைத்து கருத்து வெளியிடப்பட்டுள்ளமை அநீதியான செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்த அவர் அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இந்த கருத்தினை வெளியிட்டார்.
பிணை முறி தொடர்பான முதற்கட்ட அறிக்கை வெளியானவுடன் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனைவிடுத்து தமது கட்சி சார்ந்தவர்களை மாத்திரம் குறைக் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment