ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்துவிட்டோம் - கூட்டு எதிரணி
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அறிவிக்கப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு கூட்டு எதிரணி தயாராகவே இருக்கின்றது. வெற்றிபெறும் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் மட்டுமேயாகும் என்று உயர்நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர் ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு 2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் விடுக்கப்படவேண் டும்.
அதன்படி நாங்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிவிட்டோம். அதாவது வெற்றிபெறக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். குறிப்பாக சிங்கள மற்றும் தமிழ் மக்களினதும் ஆதரவைப் பெறக்கூடிய வேட்பாளரை களமிறக்குவோம்.
நாங்கள் ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்துவிட்டோம். அவரை நேரம் வரும்போது களமிறக்குவோம். அதாவது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை நாங்கள் களமிறக்குவோம் என்றார்.
Post a Comment