வானில் பறந்து, மாடிக்குள் பாய்ந்த கார்
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதி சாலை வழியாக (உள்ளூர் நேரப்படி) நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் படுவேகமாக வந்த ஒரு வெள்ளைநிற சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு சுவரின்மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் சுமார் இருபது அடி உயரத்துக்கு வானில் பறந்து எகிறிய கார், பக்கவாட்டில் இருந்த ஒரு கட்டிடத்தின் மாடி ஜன்னலுக்குள் பாய்ந்து, சொறுகி நின்றது.
பல் டாக்டர் ஒருவருக்கு சொந்தமான கிளினிக்கில் நோயாளிகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை சேமித்து வைத்திருக்கும் அறைக்குள் முன்பகுதி புகுந்த நிலையில் பின்பக்கத்தின் பெரும்பகுதி அந்தரத்தில் தொங்கியபடி ஒரு கார் நிற்கும் காட்சியை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்துவந்த போலீசார், கிரேன் மூலம் அந்த காரை அப்புறப்படுத்தினர். அந்த காரை ஓட்டிச் சென்றவர் யார்? அவரது நிலைமை என்ன? என்பது தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Post a Comment