கொழும்பை தனியாக பிடிப்போம் - மனோ கனேசனின் ஆதரவு தேவையில்லை
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் கொழும்பு மாநகர சபையை, ஐக்கிய தேசியக் கட்சி தனியாக பிடித்து, தனியாகவே ஆட்சியும் அமைக்கும். தமக்கு எவருடைய ஆதரவும் தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தமது கட்சியின் ஆதரவு தேவையென்றால், கொழும்பு மாநகர பிரதிமேயர் பதவியை தமது கட்சியின் சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிடும் குகவரனுக்கு வழங்கினால் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கப்படும் என மனோ கனேசன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாம் அவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். அதாவது உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு மக்களது ஆதரவே அவசியம்.
எந்த கட்சியினதும் அதரவின்றி நாம் கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுவோம். தனியாக ஆட்சியமைப்போம். கொழும்பு மாநகர பிரதி மேயர் யார் என்பதை நாமே தீர்மானிப்போம் என்றார்.
கௌரவ மந்திரி அவர்களே!
ReplyDeleteநாங்கள் உங்களை நல்லமுறையில் மதிக்கின்றோம். உங்களுக்கன்று ஒரு நல்ல பெயர் இருக்கிறது.
அதற்க்காக வாய்க்கு வந்தமாதிரியெல்லாம் பேசவேண்டாம். எமெக்குமேலால் ஒரு சக்தி உள்ளது. அவனுடைய நாட்டம் எப்படியோ அது அவனுக்குத்தான் தெரியும். இருந்தாலும் நீங்கள் கொஞ்சம் நிதானபோக்கை கடைபிடிக்கவும். மேலும் கௌரவ அமைச்சர் மனோ கனேசன் அவர்களைபோன்று நல்ல அரசியல்வாதிகள் இந்தநாட்டில் இன்னும் பலர் வரவேண்டும். முடிந்தால் எங்களது அரசியல் தலைவர்கள் அவரிடம் படம் படிக்கவேண்டும், அவருடைய நேர்மை, அவருடைய தஹ்ரியம், அவருடைய திறமை எண்களின் தலைவர்களிடத்தில் யாரிமிருக்கிறது.He is the one of Political lion in our country