Header Ads



இரத்த தட்டுப்பாடு, இரத்த தானம் செய்ய கோரிக்கை


தேசிய இரத்த பரிமாற்ற நிலையத்தின் களஞ்சியசாலையில் இரத்த தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருப்பதனால் விரைவாக இரத்த தானங்களை செய்யுமாறு அந்த நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 

டெங்கு மற்றும் வேறு நோய்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் களஞ்சியத்திலுள்ள இரத்த அளவு குறைவடைந்து செல்வதாக அந்த நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் ருக்‌ஷான் பெல்லன கூறினார். 

அதேவேளை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலத்தில் இரத்த தானம் செய்யும் அளவு குறைவானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த நிலமையில் இரத்த தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதால் பொது மக்களிடமிருந்து தானமாக இரத்தம் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக டாக்டர் ருக்‌ஷான் பெல்லன கூறினார். 

அதன்படி தேசிய இரத்த பரிமாற்ற நிலையத்திற்கொ அல்லது அருகில் உள்ள வைத்தியசாலையின் இரத்த மத்திய நிலையத்திற்கோ சென்ற இரத்த தானம் செய்யலாம் என்று அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

1 comment:

  1. ஏம்பா சிங்க லே சிங்க லே என்று எல்லா இடங்களிலும் ஒட்டிக்கிட்டு திரிபவனுகள பிடித்து பத்து நூறு கலன் லே எடுத்து ஸ்டாக் வச்சிக்கலாம்ல.

    ReplyDelete

Powered by Blogger.