Header Ads



முஸ்லிம்களின் சம்மதத்துடன் வடக்கு - கிழக்கு இணையும் - சுமந்திரன்

"தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இணையும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. ஆனால், வடக்கு கிழக்கு இணைப்பை வெறும் கோஷமாக முன்வைப்பவர்கள் அதனைக் குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். வடக்கு கிழக்கு இணைப்பை தடுப்பதற்காக பச்சை பச்சையாக பிரதேசவாதத்தையும் கக்குகின்றனர்.''

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

"இன்று வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டும் என்பதை வெறும் கோஷமாக சொல்லிக்கொண்டிருப்பவர்கள்தான், வடக்கு கிழக்கு இணைப்பை சாத்தியமற்றதாக்கிக்கொண்டிருக்கின்றார்கள். மனதளவில் வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்படுத்தவேண்டும் என்று நினைப்பவர்கள் அதனை கோஷமாக முன்வைத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இணைப்புக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டும் என்று வெறுமனே கூறினால் அது முஸ்லிம் மக்களின் மனதைப் பாதிக்கும். ஏனென்றால், தங்களுடன் கலந்தாலோசிக்காமல் அப்படி எவ்வாறு கூறமுடியும் என்று அவர்கள் சிந்திப்பார்கள். அதனால்தான் நாங்கள், வடக்கு கிழக்கு மாகாணங்கள், கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இணைக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றோம்.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பதை வெறும் கோஷமாக மாத்திரம் பாவித்துக்கொண்டிருப்பவர்கள் பச்சை பச்சையாக பிரதேசவாதத்தை தமிழ் மக்கள் மத்தியில் அவிழ்த்துவிட்டிருக்கின்றார்கள். கிழக்கில் கருணா செய்ததை தமிழரசுக் கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் செய்யப் பார்க்கின்றாரா என்று எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். துரைராஜசிங்கம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக பிரதேசவாதத்தை வெட்கமில்லாமல் கிளப்பியிருக்கின்றார்கள்.

இப்படிச் செய்பவர்கள், கிழக்கு முஸ்லிம் மக்களின் மனதை மாத்திரம் அல்ல, தமிழ் மக்களின் மனதையும் புண்படுத்துகின்றார்கள். வடக்கு கிழக்கு இணைப்பை தடுப்பதற்காகத்தான் இவ்வாறு செய்கின்றார்கள்.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பில் மூன்று தெரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வடக்கு கிழக்கு இணைப்புக்காக நாங்கள் அவ்வாறு வழிகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வடக்கு கிழக்கு இணைப்பை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்று சொல்லிக்கொண்டு வடக்கு கிழக்கு இணைப்பையே இல்லாமல் செய்கின்ற வேலையைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்'' என்றார்.

3 comments:

  1. Dear MR. Sumandiran,
    You can dream how ever you whish.
    But don’t deliver out among the people.
    I don’t think so, north and east never joint together.
    Sorry boss.

    ReplyDelete
  2. கிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களை இணைத்து நிலத்தொடர்பற்ற ஒரு ஆட்சி பிராந்தியத்தை வேண்டுமானால் கோருங்கள் (அதற்கும் கிழக்கு தமிழ் மக்கள் விரும்புவார்களோ தெரியாது) ஆனால் தமிழ் மக்கள் தொகையை விட இருமடங்கு அதிகமாகவுள்ள ஏனைய இன மக்களின் விருப்பை மீறி ஒரு தீர்வை எட்ட நினைத்தால் அது இன்னும் பிரச்சினையை வளர்க்குமே அன்றி பிரச்சினைக்கான தீர்வாக அமையாது.ஆனால் நான் சொன்னபடி முயற்சித்தால் தீர்வு ஒன்று எட்டப்படுவதுடன் அது ஏனைய இனங்களுக்கும் பாதிப்பாக இராது. அது நிகழ்ந்தால் கிழக்கு, கிழக்கு மாகாணமாகவே இருப்பதுடன் வடகிழக்கு என்ற (கிழக்கு தமிழர்களை உள்ளடக்கிய)புதிய மாகாணம் மேலதிகமான மாவட்டமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இறுதிவரியை மேலதிக மாகாணம் என வாசிக்கவும்

      Delete

Powered by Blogger.