Header Ads



வெளிநாட்டவர்களை சந்திரிக்கா 'லவ்' பண்ணுகிறார் - மேர்வின்

மொராகாஹகந்த பல்நோக்கு திட்டமானது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் தற்போதைய ஜனாதிபதி மகாவலி அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

மேர்வின் சில்வாவின் வீட்டில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ருவன்வெலிசாய துட்டகைமுனு மன்னனால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டம், நிறைவு செய்ய முடியாமல் போனமைக்கு பின்னர் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.

ராஜபக்ஷ வம்சத்தினர் கள்வர்கள் இல்லை, அவர்களிடம் காணப்பட்டதை விற்பனை செய்தே அரசியல் செய்தார்கள்.

வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாமல் போனமைக்கு ராஜபக்ஷ பரம்பரையுடன் தனக்கு எந்தவித கோபமும் இல்லை.

இன்று சுதந்திரமாக சென்று வருவதற்கான சூழல் காணப்படுகின்றது அவருக்கு அதிக புண்ணியங்கள் சேரட்டும்.

தனக்கு தேர்தலில் களமிறங்க முடியாமல் போனமைக்கான காரணம் பற்றி சொல்ல வேண்டுமானால், அதற்குரிய காரணகர்த்தா சந்திரிக்கா அம்மையார்தான்.

அவர் தற்பொழுது நல்லிணக்கம் தொடர்பில் கதைத்துக்கொண்டு தடுமாறுகின்றார்.

சந்திரிக்கா வேறு நாட்டை சேர்ந்தவர்களை 'லவ்' பண்ணுவதனால் அவர்களை காப்பாற்றுவதற்காக நாட்டை காட்டி கொடுக்கவே முயற்சிக்கின்றார் என மேர்வின் சில்வா தெரிவித்தார். 

3 comments:

  1. Belty adeeeee
    Super belty inggggggaaaaa

    ReplyDelete
  2. சைத்தான்களின் ஊசலாட்டங்களைப் பிரசுரித்து உங்கள் இணையத்தளத்தின் தரத்தை தயவுசெய்து தரம் குறைக்கும் வேலைகளைச் செய்யாதீர்கள் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.