Header Ads



மாணவனை மூர்க்கத்தனமாக, தாக்­கிய ஆசி­ரியர்

கொழும்பு கொட்­டாஞ்­சேனையிலுள்ள பிர­பல தமிழ்  பாட­சா­லை­யொன்றில் 9 வயது மாணவன் ஒரு­வனை அடித்து காயங்­க­ளுக்­குள்­ளாக்­கிய ஆசி­ரியர் ஒருவர்  நேற்று முன்­தினம் கொட்­டாஞ்­சேனை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கொட்­டாஞ்­சே­னையின் பிர­பல தமிழ்  பாட­சா­லையில் கல்வி கற்­பிக்கும் 25 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்­வாறு கைது­ செய்­யப்­பட்­டுள்ளார்.

இச்­சம்­பவம் குறித்து  மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் பிர­பல பாட­சா­லை­யொன்றில் இவ்­வாண்டு தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவர் ஒரு­வ­னை அவ்­வ­குப்பில் கல்வி கற்­பிக்கும் ஆசி­ரியர் ஒருவர் கடு­மை­யாக தாக்­கி­யுள்ளார்.

இவ்வாறு தாக்­கு­த­லுக்­குள்­ளான 9 வயது மாணவன் கொழும்பு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்ற நிலையில் இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­ப­ரான குறித்த ஆசி­ரியர் நேற்று முன்­தினம் கொட்­டாஞ்­சேனை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். 

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட ஆசியர் நேற்று கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழு ம்பு கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

3 comments:

  1. மாதா பிதா குரு தெய்வம்.ஆசிரியர்களை மனநல மருத்துவரிடம் ஒவ்வொரு மாதமும் check upயிற்கு அனுப்பினால் நல்லம்.

    ReplyDelete
  2. ஆசிரியர் குற்றவாளியாக நிரூபணமானால் அவர் வேலைநீக்கம் செய்யப்படவேண்டும்.சட்டம் இதை செய்யுமா .....?????

    ReplyDelete
  3. ஆசிரியர் குற்றவாளியாக நிரூபணமானால் அவர் வேலைநீக்கம் செய்யப்படவேண்டும்.சட்டம் இதை செய்யுமா .....?????

    ReplyDelete

Powered by Blogger.