Header Ads



மூக்கு உடைபட்ட யானை, தேர்தல் ஆணைக்குழுவிடம் முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு

மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தை மையப்படுத்தி ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்களை வெளியிடுவதற்குத் தடைவிதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்பான சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலராலேயே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும், தனியொரு கட்சியை இலக்குவைத்து பிரசாரம் செய்யப்படுவது தேர்தல் விதிமுறையை மீறும் செயலாகும் எனவும் அந்தக் கோரிக்கை விண்ணப்பத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.

மத்தியவங்கி பிணைமுறிமோசடி தெடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையை டிசம்பர் 30 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தது. மேற்படி அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எனினும், சட்டமா அதிபர், மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரிடம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவராக இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராகவும், அவரது மருகமகனுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த அறிக்கையைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக்கட்சிமீது அரசியல் கட்சிகள் விமர்சனக்கணைகளைத் தொடுத்துவருகின்றன.

எனவேதான், அவ்வாறான அறிவிப்புகளை ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கோ அல்லது பிரசுரிப்பதற்கோ தடைவிதிக்கக்கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ள தேர்தல் ஆணைக்குழு, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அந்தத் தரப்பால் முன்வைக்கப்படும் பதில் கருத்துகளை ஒளிபரப்புவதற்கு பிரசுரிப்பதற்கு ஊடகங்கள் இடமளிக்கவேண்டும் என்று கோரியுள்ளது.

1 comment:

  1. Ithil enna moooku udaithal irukku...? Niyaayamaana kelvi..Niyaayamaana pathil...
    May be this title is My3 Anthem..???

    ReplyDelete

Powered by Blogger.