மைத்திரிக்கு சந்தேகம், இன்று உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு
மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பான முடிவை எடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் திறந்த அமர்வில் இன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டிலா அல்லது 2021ஆம் ஆண்டிலா முடிவடைகிறது என்று உச்சநீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.
இதுதொடர்பாக தமக்கு எதிர்வரும் 14ஆம் நாளுக்குள் விளக்கமளிக்குமாறு கோரியிருந்தார்
இதற்கமைய, உச்சநீதிமன்றம் இன்று -11- காலை 11 மணியளவில் சிறப்பு திறந்த அமர்வு ஒன்றை நடத்தவுள்ளது.
தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில், அமைக்கப்பட்டுள்ள நீதியரசர்கள் ஈவா வணசுந்தர, ஆலுவிகார, சிசிர டி ஆப்ரூ, கே.ரி.சித்ரசிறி ஆகியோரைக் கொண்ட அமர்வு, இதுபற்றிய கருத்துக்கள், வாதங்களைக் கேட்டறிந்து, தமது முடிவை மைத்திரிக்கு அறிவிக்கவுள்ளது.
Post a Comment