Header Ads



நஸீர் அஹமட்டை, கைதுசெய்க - சிராஸ் நூர்தீன் நீதிமன்றத்தில் வாதம்


ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு சொந்தமான காணியை மோசடியான முறையில் தனக்கு சொந்தமான யுனிட்டி பில்டர்ஸ் கம்பனிக்கு உடைமையாக்கியமை உள்ளிட்ட பல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றமை தொடர்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஸீர் அஹமட் செய்னுலாப்தீனை கைது செய்ய உத்தரவிடுமாறு முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் நீதிமன்றில் தெறிவித்தார்.

 கிழக்கு மாகாண  முன்னால் முதலமைச்சருக்கு எதிராக கொழும்பு மோசடிப் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று 10-01-2018 விசாரணைக்கு எடுக்கப் பட்டது.

கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி. லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப் பட்ட இவ்வழக்கின் போது முதலாம் சந்தேக நபரான  கிழக்கு மாகாண  முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் செய்னுலாப்தீனின் வாக்கு மூலத்தை உடனடியாகப் பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மோசடிப் புலனாய்வுப் பிரிவுக்கு கடுமையான உத்தரவிட்டதோடு, வழக்கை எதிர்வரும் ஜனவரி 30ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

விசாரணையின் போது முன்னாள் முதலமைச்சரின் முகவரியை கண்டுபிடிக்க முடியாதிருப்பதாகவும் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் கொழும்பு மோசடிப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்த போது, முதலாம் சந்தேக நபர் அறியப்படாத ஒரு நபரல்ல என்று தெரிவித்த நீதவான் தராதரம் பார்க்காது யுனிட்டி பில்டர்ஸ் நிருவனத்தோடு தொடர்பு பட்ட அவரது சகல விடயங்களையும் உள்ளடக்கியதாக வாக்கு மூலத்தை பதிவு செய்து உடனடியாக சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

இவ்வழக்கின் போது முறைப்பாட்டாளரான ஏ.கே.சி. துவான் நஸீர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் முஸ்லிம் காங்கிரஸுக்கு சொந்தமான காணியை மோசடியான முறையில் அபகரித்தமை மட்டுமல்ல என்றும் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய முத்திரை வரியையும் செலுத்தாமல் மோசடி செய்திருப்பதால் தண்டனைச் சட்டக் கோவை, பிரிவு 406ன் கீழ் நேரடியாக உள்வாங்கப்படும் 2 வருட சிறைத் தண்டனை வழங்கப்படக்கூடிய ஒரு குற்றமாக இருப்பதால் அவரை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என நீதவானிடம் கோரிக்கை விடுத்தார். 

மேலும் கார்சன் கம்பர்பர்ச் நிருவனம்  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே மேற்படி காணியை விற்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில் முதலாம் சந்தேக நபரான நஸீர் அஹமட்டை கைது செய்ய போதுமான சாட்சியங்களும் நியாயமான காரணங்களும் இருப்பதாக சுட்டிக் காட்டினார்.

இதன் போது முதலாம் சந்தேக நபரை கைது செய்ய உத்தரவிடுவதற்கு முன் முதலாம் சந்தேக நபரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட நீதவான் லங்கா ஜயரத்ன அதன் பின் சகல சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆரைய்ந்த பின்பே அதனை செய்ய முடியும் என்று  சுட்டிக்காட்டியதோடு நவம்பர் 8ம் திகதி நடந்த வழக்கு விசாரணையிலிருந்து இன்றுவரை நஸீர் அஹமட்டிடம் இருந்து வாக்குமூலம் பெறப்படாமை குறித்து தனது கண்டனத்தை தெரிவித்தார்.


இம்மோசடி குறித்து மோசடிப் புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே கொழும்பு காணிப் பதிவாளர், கம்பனிப் பதிவாளர் நாயகம், காணி உறுதியை மோசடியான முறையில் மாற்றியதாகச் சந்தேகிக்கப்படும் 2ம் சந்தேக நபரான ஒரு சட்டத்தரணியிடமிருந்தும் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.

7 comments:

  1. இந்த வழக்கில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும்...

    ReplyDelete
  2. Masha Allah good Work, Go Ahead Sir.

    ReplyDelete
  3. Buddhist country யிலிருந்து கலவாடப்பட்ட௱ள் மறுமையில் கேள்வி இல்லையா,Muslim country யில் மட்டுமா கேள்வி?

    ReplyDelete
  4. இன்றைக்கு அரசியலில உள்ள அமதன் சோனகனும் பச்சைக்களர்கள்.....

    ReplyDelete
  5. கள்வர்கள்

    ReplyDelete
  6. காலம் சென்ற மர்ஹூம் அஷ்ரப் அமைச்சர் விட்டுச் சென்ற மக்களின் பணம் கோடான கோடியை இந்த நபர் சுருட்டிக் கொண்டு மௌனம் காத்து அதன் பின் கோடிஸ்வரனாக மாறியதாக மக்கள் சொல்வதில் உண்மை இருக்கின்றதா என்பதையும் ஆராய வேண்டும்.

    ReplyDelete
  7. mulu muslimkalum oru sila kallarkalal thalai kuniya vendiullathu. neethi illathavanukku mattuma

    ReplyDelete

Powered by Blogger.