Header Ads



ஜனாதிபதிக்கு தலைகீழாக கிடைத்த தீர்ப்பு - ரணிலுக்கு வெற்றியா..?


ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக இன்று சில இடங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

கொழும்பில் இன்று -15- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தான் எதிர்பார்த்த பதில் கிடைக்கும் என்றே ஜனாதிபதி பிரச்சினையை நீதிமன்றத்திற்கு அனுப்பினார். எழுப்பப்படும் கேள்விக்கு பதில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்று தான் கேள்வியை முன்வைப்பார்கள் அப்படித்தான் இந்த விளக்கத்தையும் உயர்நீதிமன்றத்திடம் கோரினார்கள்.

5 வருடங்களுக்கு மேல் இருக்க முடியும் தானே என்றுதான் விளக்கத்தை கோரினர். ஆனால் நீதிமன்றத்தின் பதில் தலைகீழாக வந்துள்ளது. இங்கும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான போராட்டமே பதிவாகியுள்ளது.

ஆறு வருடங்கள் பதவியில் இருக்க வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இருந்தது. எனினும் அதனை 5 ஆண்டுகளுக்கு வரையறுக்க வேண்டும் என்ற தேவை பிரதமருக்கு இருந்தது.

ஆறு வருடங்கள் என்றால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் வரும். 5 ஆண்டுகள் என்றால், ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரே பொதுத் தேர்தல் வரும்.

ஜனாதிபதியை நெருக்கடிக்குள் தள்ளி முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் தேவை பிரதமருக்கு இருந்தது.

பொதுமக்கள் என்ற வகையில் இந்த நிலைமையை நாம் கண்காணிக்க வேண்டும் என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.