உயிர் தப்பிய, அமைச்சரின் விளக்கம்
இன்னும் கொஞ்ச நேரம் ஆகாயத்தில் இருந்திருந்தால், விமானம் கடலுக்குள்ளேயோ அல்லதுவேறெங்கேயோ இருந்திருக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மிகவும் கஷ்டப்பட்டு உயிரை காப்பாற்றிக்கொண்டு வந்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் சென்ற போது, விமானம் திசைமாறி பயணித்தமைதொடர்பில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர்சம்பவம் தொடர்பில் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
அமைச்சர் மேலும் கூறுகையில்,
“யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழாவில் பங்கேற்க நான் தனியார் விமானமொன்றில்பயணித்தேன்.
போகும் வழியில் பலாலி விமானநிலையத்தை விமானிக்கு கண்டுபிடிக்க முடியவில்லை.அதனால், மேலதிகமாக 30, 45 நிமிடங்கள் ஆகாயத்திலேயே பயணிக்க வேண்டி ஏற்பட்டது.
மிகவும் கஷ்டப்பட்டு உயிரைக் காப்பற்றிக் கொண்டு வந்தோம்.தவறு நேர்ந்து விட்டது.அவர்களின் வரைப்படத்தில் பலாலி என, தலைமன்னாரை நோக்கி பயணித்துள்ளது.
பின்னர் அவர்களும், நிலைமையை அறிந்ததால், உயிரை காப்பாற்றிக் கொண்டோம்.இறுதியில் எரிபொருள் பிரச்சினையொன்றும் வந்தது. எனினும், அந்த இடத்திற்கு (பலாலி)செல்லும்வரை இருந்தது.
இன்னும் கொஞ்சநேரம் இருந்திருந்தால், கண்டுபிடிக்க முடியாதிருந்திருந்தால், எங்கேயாவதுகடலுக்குள்ளேயோ அல்லது வேறெங்கேயோ இருந்திருக்கும்” என அமைச்சர் மஹிந்த அமரவீரவிளக்கமளித்துள்ளார்.
Post a Comment