சகோதரர் அன்சிக்கு திறந்த மடல்
அஸ்ஸலாமு அலைக்கும்!
கடந்த பிரதேச சபை தேர்தலில் உங்களுக்கு ஒரு விருப்பு இட்டவன் என்ற வகையில் முழு உரித்துடன் இந்த மடலை எழுதுகிறேன்.
மு.கா. தலைவர் மீது நீங்கள் வைத்திருந்த விசுவாசத்தை கண்டு, உங்கள் மீதுள்ள நம்பிக்கையில் நாங்களும் அவர்மீது உங்களை விட கொஞ்சம் குறைவாகவே விசுவாசம் வைத்தோம். அதனால் அந்த விசுவாசம் இன்னும் அப்படியே இருக்கிறது. ஆனால், நீங்கள் அதை திடீரென வஹி இறங்கியது போல் முறித்துக்கொண்டதன் மர்மம்தான் என்ன என்று இன்னும் புரியாமல் இருக்கிறது.
உங்கள் வளர்ச்சியைக் கண்டு நான் அடிக்கடி பெருமைப்பட்டதுண்டு. ஆனாலும் அது நிலைக்கவில்லை என்று எண்ணும்போது கவலைதான். என்ன செய்ய, நீங்கள் சதிவலையில் சிக்குண்டதை எண்ணி மனம்வருந்துகிறேன். உங்களில் இன்னும் மரியாதை வைத்துள்ளேன். அதனால்தான் நீங்கள் 15 வருடங்களாக மானசீகமாக நேசித்து, போசித்த ஒருவரை தரக்குறைவாக பேசியும் என்னால் அப்படி உங்களை பேசமுடியாது வாய்கூசுகிறது.
சரி, விடயத்துக்கு வருகிறேன். தேர்தல் அறிவித்த நாள் முதல் நீங்கள் பல்வேறு கூட்டங்களை ஏற்பாடு செய்து மணித்தியாலக் கணக்கில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் செய்த தவறுகள் என்று குற்றச்சாட்டுகளை அடிக்கிக்கொண்டு போனீர்கள். அதற்கு ரவூப் ஹக்கீம் பதிலளித்து அழிவுச்சத்தியம் செய்யவேண்டும் என்றும் சொல்லி வந்தீர்கள்.
நியாயமாகப் பார்த்தல், உங்கள் கேள்விகளுக்கு பதில் வழங்க வேண்டிய கடப்பாடு தலைவர் என்ற வகையில் அவருக்கு இருக்கோ, இல்லையோ மக்களுக்கு உண்மைகளை சொல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு அவர்மீது உள்ளது. அதுவும் பாலமுனை மக்களுக்கு முதலில் அவர் பதில் வழங்கியாக வேண்டும் என்ற நோக்கில் நேற்றிரவு பாலமுனை பிரதான வீதியில் மு.கா. மத்திய குழு ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள இருந்தார்.
சகோதரர் அன்சில் அவர்களே..! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்று வைத்துக் கொண்டால், ஏன் தலைவர் ரவூப் ஹக்கீம் பாலமுனை பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை உங்களைச்சார்ந்தவர்கள் மூலம் மேற்கொண்டீர்கள்? பொதுவாக சிந்திக்கும் பலமுனை மக்கள், உங்கள் பேச்சையும் தலைவர் ரவூப் ஹக்கீமின் பேச்சையும் கேட்டு ஒப்பிட்டு எது உண்மை என்பதை அறிந்தால், ஒருவேளை நீங்கள் சொல்வதுதான் உண்மை என்று உங்கள் பக்கம் சாய்ந்திருக்கலாம் அல்லவா?
ஆனால், நீங்கள் பாலமுனையில் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுவதை தடுப்பதற்கு மேற்கொண்ட கேவலமாக முயற்சிகளை பார்க்கும்போது, மிகவும் அருவறுப்பாக இருக்கிறது. தலைவர் ரவூப் ஹக்கீம் மக்கள் முன் சாட்சியமளிப்பதை உங்கள் சகாக்களை வைத்து தடுக்க முற்பட்டதன் பின்னணி குறித்து சந்தேகம் எழுவதை தவிர்க்கமுடியாதுள்ளது.
பாலமுனை அசம்பாவிதத்தின் பின் எனக்குள் தோன்றிய சில சந்தேகங்கள்
* நீங்கள் சொன்ன அத்தனையும் பொய்யாக இருக்கவேண்டும்
* தலைவர் ரவூப் ஹக்கீம், உங்கள் கேள்விகளுக்கு வழங்கும் பதில் உங்களுக்கு சார்பாக இல்லாதிருக்கலாம்
* நீங்கள் செய்த ஏதாவது திருகுதாளங்களை அவர் மக்கள் முன் உடைத்துவிடுவாரோ என்ற அச்சம் இருக்கலாம்
* உங்கள் கேள்விகளுக்கு அவர் பதில் வழங்கினால், மக்கள தெளிவடைந்து விடுவார்கள் என்ற பயம் இருக்கலாம்
* தலைவர் ரவூப் ஹக்கீம் பற்றி நீங்கள் மக்கள் மத்தியில் உருவாக்கி வைத்திருக்கும் மாயையை அவர் உடைத்துவிடுவாரோ என்ற அச்சம்
மேற்கூறிய எந்த விடமும் இல்லையென்றால், நீங்கள் ஜனநாயக முறைப்படி தலைவர் ரவூப் ஹக்கீம் பேசுவதற்கு தடங்கல் ஏற்படுத்தாமல் இருந்துவிட்டு, மறுநாள் அதற்கு நீங்கள் பதிலளித்திருப்பதே நியாயம். எனினும் சில காடையர்களில் உணர்ச்சி அரசியலுக்குள் சிக்குண்டு நீங்கள் அரசியல் கத்துக்குட்டி என்பதை நிரூபித்துவிட்டீர்கள் என்றே தோன்றுகிறது.
நீங்கள் வளர்ந்துவரும் ஓர் அரசியல்வாதி என்ற வகையில், எல்லா ஊர் மக்களையும் அனுசரித்துப் போகவேண்டும். பாலமுனையில் 100% உங்களுக்கு வாக்குவங்கி இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், உங்களால் அரசியலில் அடுத்த கட்டத்தை அடைய அது போதுமா என்பது அசாத்தியமே.
இதனால், அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் கிராமங்களின் தயவு உங்களுக்கு அவசியம் என்பதை மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியாயின், நீங்களும் உங்கள் நண்பர்களும்களும் பாலமுனை கூட்டம் பாக்கவந்த ஒலுவில் மற்றும் அட்டாளைச்சேனை மக்கள் மீது கல்லெறி தாக்குதல் நடத்தியது உங்கள் அரசியலின் அஸ்தமனம் என்றே எண்ணத்தோன்றுகிறது.
கடைசியாக ஒன்றை மட்டும் சொல்கிறேன். மு.கா. தலைமையும் கட்சிப் போராளிகளும் உங்களை தவிசாளர் என்ற பதவியைத் தந்து அழகுபார்த்ததோடு, இன்னும் படிப்படியாக அரசியலில் உங்களை உயர்த்தி அழகுபார்க்க எண்ணியிருந்தோம். எனினும் நீங்கள் வட்டாரம் என்ற குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டினால் போதும் என்று நினைப்பதாகவே பாலமுனை அசம்பாவிதம் எடுத்துக்காட்டுகிறது.
வாய்ப்பு, வசதிகள் ஒரு தடவைதான் கதவைத் தட்டும். அதை விட்டுவிட்டு, குத்துக்கரணம் போட்டாலும் உங்களை திருப்பி பார்க்காமல், எட்டி உதைத்து போய்க்கொண்டே இருக்கும் என்பது உங்களைப் பார்த்து நான் அறிந்துகொண்ட உண்மை.
என்றும் அன்புடன்....
சேனையூறான்
ஐயயோ பாவம் ,அழகாக ஒரு பொய்யனுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரை ,உங்கள் பொய் தலைவன் முதல் மாறட்டும் பிறகு எல்லாம் மாறும் .
ReplyDeleteஇது முற்றிலும் பொய்யான செய்தியாகும். ஹக்கீமின் பேச்சை யாருமே தடுக்கவில்லை. அதற்கு அவரே சாட்சியாகும்.
ReplyDeleteஆனால், ஹக்கீம் அன்சில் முன்வைத்த எந்தவொரு குற்றச்சாட்டிற்கும் அறிவுபூர்வமாக பதிலளிக்கவில்லை ஏன்? மழுப்பலான பேச்சிற்கு மக்கள் கூப்போட்டார்களே தவிர, அவர் பேசும்போது தடுக்கவில்லை.
ஆனால், அந்த இடத்திற்கு அன்சில் நேரடியாக சென்று ஹக்கீமிடம் பல நியாயமான வாதங்களை முன்வைத்து வாதாட இருந்தார். ஆனால், பொலிசாரின் கோரிக்களை கேட்டு அங்கு செல்லாமலிருந்தார்.
உண்மைக்குப் புறம்பான செய்திகளை JM பதிவிடக் கூடாது