1000 பக்கங்களைக் கொண்ட மகிந்த காலத்து ஊழல்கள் - இன்று அறிக்கை வெளியாகிறது
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள், மோசடிகள் போன்ற மோசமான செயல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று -02- சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
பல்வேறு ஊழல், மோசடிகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த 1000 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், எதிர்காலத்தில் எவ்வாறு இத்தகைய மோசடிகளைத் தடுப்பது மற்றும் பெரியளவிலான ஊழல் மோசடிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆணைக்குழுவின் தலைவரான மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பத்மன் சூரசேன இந்த அறிக்கையை இன்று சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பார்.
இந்த ஆணைக்குழு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 34 பிரதான ஊழல், மோசடிகள் குறித்து விசாரணைகளை நடத்தியிருந்தது.
Post a Comment