Header Ads



இந்தியாவிலிருந்து கப்பல் மூலம், ஹஜ் பயணம்


இந்தியாவில் இருந்து, அரபு நாடான, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்கள், மும்பை - ஜெட்டா வரை, கடல் மார்க்கமாக பயணிக்கும் நடைமுறை, ஏற்கனவே இருந்தது. 1995ல், கடல் வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடல் வழி ஹஜ் பயணத்தை மீண்டும் துவங்கும்படி, மத்திய அரசு, சவுதி அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.

இதை, சவுதி அரசு ஏற்றுள்ளது. இரு நாட்டு அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின், விரைவில் இந்த சேவை துவங்கப்படும். இதன் மூலம், ஹஜ் புனித யாத்திரை சென்று வருவதற்கான செலவு, பெரும் அளவில் குறையும்.

மும்பையில் இருந்து கடல்வழியாக 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹஜ் பயணம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படுகிறது. மும்பை - ஜெட்டா இடையே கடல் வழியாக நடைபெற்று வந்த ஹஜ் பயணம் கடந்த 1995ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கப்பல் மூலம் ஹஜ் பயணம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறுகையில், கடல்வழியாக பயணம் மேற்கொள்ளும்போது பயணச்செலவு பாதியாக குறையும் வாய்ப்புள்ளது. மேலும் நவீன மயமாக்கப்பட்டுள்ள கடற்பயணத்தால் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் வரை கப்பலில் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும். மும்பை தவிர கொல்கத்தா மற்றும் கொச்சியும் கப்பல் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள சிறந்த இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றன.

No comments

Powered by Blogger.