கோத்தபாய அரசில் இணைந்தால், நான் விலகுவேன் - பொன்சேகா
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க அரசாங்கத்தில் இணைந்தால், தான் அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வேன் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் எந்த வகையிலும் இணையக்கூடாது. இந்த கட்சிகள் இரண்டு இணைவது என்பது பாம்பும் கீரியும் திருமணம் செய்வது கொள்வதற்கு ஒப்பானது.
மகிந்த ராஜபக்ச போன்றவர் தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றலாம் என்று தான் எண்ணவில்லை எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment