பாலமாக செயல்படும் வளமும், சுமூக உறவும் முஸ்லீம்களிடம் உள்ளது - அனீஸ் ரவூப்,
-Farzan Basir-
நோர்வேயில் வாழும் இலங்கை முஸ்லீம் சமூகம்(United Sri Lankan Muslim Association of Norway -USMAN) ஏற்பாடுசெய்த இன நல்லிணக்கத்துக்கான நாள் Harmony day தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது. நோர்வேயில் வாழும் இலங்கை பின்புலத்தை கொண்ட தமிழ், சிங்கள மக்களை ஒன்றிணைத்து ஒரு பொதுவான மேடையில் கலாசார நிகழ்வுகளோடு ஒரு தினத்தை ஆண்டுதோறும் கொண்டாடவேண்டும் என்று நீண்டகாலமாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைக்கு அமைய நோர்வே வாழ் முஸ்லீம் சமூகத்திடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்றது.

நோர்வே நாட்டில் வாழும் முஸ்லீம் சமூகம், சிங்கள மற்றும் தமிழ் சமூகத்துடன் சிறப்பான உறவுகளை பேணிவரும் நிலையில் மூவின மக்களினதும் கலை கலாசார பின்புலத்தை சித்தரிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாரம்பரிய சிங்கள நடனம், தமிழ் இசைக்கழுவின் இசைநிகழ்ச்சி மற்றும் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் முஸ்லீம் சிறுவர்களின் பேச்சுக்கள் என்று இன ஐக்கியத்தின் நாளாக இது கொண்டாடப்பட்டது.
நோர்வே நாட்டின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் ஜோன் வெஸ்ட்போர்க் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரக உயர்நிலை அதிகாரிகள் , நோர்வேஜிய கிறிஸ்தவ சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட மூவின சமூகத்தையும் சேர்ந்த பெருமளவிலான மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய நோர்வே வாழ் இலங்கை முஸ்லீம்களின் அமைப்பின் தலைவர் அனீஸ் ரவூப்,
இலங்கை தீவில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தமிழ் சிங்கள இனங்களுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படும் வளமும், சுமூக உறவும் முஸ்லீம்களிடம் இருப்பதையும் நல்லிணக்கம் காலத்தின் தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

C O N G R A T U L A T I O N S !
ReplyDeleteBest effort; keep it up!!