Header Ads



இது பொய்யர்களின் அரசாங்கம்


இருண்ட பாதாளத்திற்குள் விழுந்துள்ள நாட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினாலேயே மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என நம்பும் மக்களில் பெரும்பாலானோர், எதிர்வரும் தேர்தலில் தாமரை மொட்டுச்சின்னத்திற்கே வாக்களிப்பாளர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை - யாகொடமுல்ல பிரதேசத்தில நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது ஆட்சியில் இருப்பது பொய்யர்களின் அரசாங்கம். பொய்களை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் பொய்களை கொண்டே அதிகாரத்தை தக்கவைக்க முயற்சித்து வருகின்றனர். இதனாலேயே நாங்கள் இந்த அரசாங்கத்தை பொய்யர்களின் அரசாங்கம் எனக் கூறுகிறோம்.

பொய்யர்களின் அரசாங்கத்திற்கு அண்மையில் மூன்றாண்டு பூர்த்தியானது. கடந்த அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்களை இவர்கள் ஆரம்பித்தது போல் திறந்து வைக்கின்றனர்.

இந்த திட்டங்கள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவை எனக் கூறவேண்டிய பொறுப்பு இருந்தது. எனினும் இந்த பொய்யர்கள் அதனை செய்யவில்லை.

அதிகாரத்திற்கு மூன்று ஆண்டுகளில் ஒரு கால்வாயை கூட நிர்மாணிக்க முடியாத அரசாங்கம், மற்றவர்கள் ஆரம்பித்த திட்டங்களை தாம் ஆரம்பித்த திட்டங்கள் போல் திறந்து வைக்கின்றனர். இவர்கள் நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்றுள்ளனர்.

அரசாங்கம், மாற்றான் பிள்ளைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் திறமை பெற்றது.

அரசாங்கம் மக்கள் மத்தியில் கேலிக்கு உள்ளாகியுள்ளது. ஒருபுறம் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் என்ற அரசாங்கத்தை அமைத்து கொண்டு, மறுபுறம் எதிர் எதிராக வாக்குகளை கேட்கின்றனர்.

நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் ஒன்றாக இருக்கும் இந்த கட்சிகள் கிராமத்தவனுக்கு பொய்யான எதிர்ப்பை காட்ட முயற்சித்து வருகின்றன.

ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பெற்றி பெற செய்ய நாடு முழுவதும் செல்லும் அதேவேளை பிரதமர், ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெற செய்ய நாட்டை சுற்றி வருகிறார்.

எனினும் இருவரும் ஒரே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.