மூவரின் உயிர்களை காப்பாற்றிய இளைஞன் - கல்லீரலை சுமந்த விமானப்படை விமானம்
பொலன்னறுவை வைத்தியசாலையில் உயிரிழந்த இளைஞர் ஒருவரால் மூன்று பேர் உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தலையில் நரம்பு வெடித்தமையினால் இரத்தம் வெளியேறி உயிரிழந்த 35 வயதுடைய இளைஞனின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கண்டி வைத்தியசாலையில் மூன்று நோயாளிகளுக்கு இந்த உடற்பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞனின் கல்லீரல் கொழும்பிற்கு விரைவாக கொண்டு வருவதற்காக விசேட வைத்தியர்கள் குழுவொன்று இலங்கை விமானப் படைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பொலன்னறுவைக்கு அனுப்புவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கல்லீரல் பொருத்துவதென்றால் இன்னும் ஒருவரிடம் பெற்றதனை உடனடியாக நோயாளியிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இதனால் விமானப் படைக்கு சொந்தமான விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கல்லீரல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 56 வயதுடைய நோயாளிக்கே பொருத்தப்பட்டுள்ளது. அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் இருவருக்கே இரண்டு சிறுநீரகங்களும் பொருத்தப்பட்டுள்ளதாக சுகாதார் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உலகின் தலைசிறந்த மனிதநேயம் உடலுறுப்பு தானம்.
ReplyDeleteஇளைஞனின் ஆத்மா சாந்தியடையட்டும்.