நெருக்கடி அதிகரித்தால், அமைச்சரவை கலைக்கப்பட்டு, புதிய அரசாங்கம் உருவாக்கப்படும்.
தேசிய அரசாங்கத்தின் நெருக்கடிகள் அதிகரிக்கும் பட்சத்தில் அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை உருவாக்கப்படும். கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் இது குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உயரிய தண்டனை வழங்கப்படும் அதற்கான சகல அழுத்தங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தற்போது அரசியல் தரப்பில் பாரிய விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது அடுத்த கட்ட நகர்வாக எதனை முன்னெடுக்கும் என வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Post a Comment